Thursday, March 13, 2025
spot_img
Homeஜோதிடம்செல்வ வளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் விருட்ச வழிபாடு..!

செல்வ வளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் விருட்ச வழிபாடு..!

இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து பணத்தை சேமிக்கிறார்கள். ஆனால் அந்தப் பணம் ஏதேனும் ஒரு வழியில் செலவாகிக் கொண்டே இருக்கிறது என வருத்தப்படுபவர்கள் உங்களுடைய உழைப்பு உங்களுடைய செல்வம்  உங்களிடம் தங்கி, மென்மேலும் வளர்வதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

சிலர் நாளாந்தம் அறுநூறு ரூபாய் சம்பாதிப்பார்கள். செலவு என்பது இருநூறு ரூபாய் மட்டுமே ஆகும்.  மீதமுள்ள நானூறு ரூபாயையும் சேமிப்பார்கள். ஆனால் சிலர் நாளாந்தம் 600 ரூபாய் சம்பாதிப்பார்கள்.ஆனால் செலவு 800 ரூபாய்க்கு மேல் ஆகும். தினமும் 200 ரூபாயை கடன் சொல்வார்கள். வாங்குவார்கள்.

இந்த தருணத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை சேமித்து அவை பல்கி பெருக வேண்டும் என்றால் உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும் என்றால் வீட்டில் நல்ல நேர் நிலையான அதிர்வை ஏற்படுத்த வேண்டும். நேர் நிலையான அதிர்வு என்றால் இதற்காக இயற்கையை சற்று உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

இயற்கை பல ரகசியங்களை தன்னுள் வைத்துள்ளது. குறிப்பாக பூ பூக்கும் ஓசை. அதிலும் குறிப்பாக மகாலட்சுமியின் மனம் கவர்ந்த மல்லிகை பூவின் மணத்தை  நீங்கள் உங்களுடைய வீடுகளில் தொடர்ச்சியாக பரவச் செய்தால் செல்வ நிலையில் மாற்றம் ஏற்பட தொடங்கும்.

உடனே எம்மில் சிலர் ஓன்லைனில் மல்லிகை பூச்செடியை தருவித்து வளர்க்கத் தொடங்குவார்கள். ஒரே வாரத்தில் அந்த செடியும் , பூக்களும் வாடி விடும். பிறகு இந்த பரிகாரம் தவறு என சொல்லத் தொடங்கி விடுவார்கள். உண்மை நிலை அதுவல்ல.

நீங்கள் சந்திராஷ்டம தினங்களில் உங்களுடைய மனம் தடுமாறுவதை துல்லியமாக அவதானித்திருந்தால் அத்தகைய தருணங்களில் மௌன விரதத்தை கடைப்பிடிப்பீர்கள். மௌன விரதம் மூலம் உங்களுக்குள் ஒரு அதிர்வை ஏற்படுத்தி, எண்ணங்களை சமப்படுத்துகிறீர்கள். செம்மையாக்குகிறீர்கள். அந்தத் தருணத்தில் நீங்கள் ஏதேனும் தோட்டங்களில் பூச்செடிகள் தொடர்பான பணிகளை அதாவது மண்ணைக் கிளறி ஏதேனும் பூக்களை பதியமிட்டு வளர்க்கத் தொடங்கினால் உங்களுடைய எண்ணத்தில் ஆரோக்கியம் ஏற்படுவதை துல்லியமாக அவதானிக்கலாம்.

அதேபோல் மகாலட்சுமி உங்களுடைய வீட்டில் வாசம் செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு மிகவும் பிடித்த மல்லிகை பூ செடியை வாங்கி வந்து வளர்க்க வேண்டும். உங்கள் வீட்டின் வாஸ்து படி இந்த மல்லிகை பூச்செடியை வைத்து பராமரித்து வந்தால் இதிலிருந்து பூக்கும் பூக்கள் உங்களுடைய பூஜை அறையில் இருக்கும் தெய்வத்தின் திருவருவ படங்களை அலங்கரிக்கப்பதுடன் அந்தப் பூவின் மணம் இல்லம் முழுவதும் பரவி மகாலட்சுமியை வசியப்படுத்தி வைத்திருக்கும்.

அத்துடன் உங்களுடைய செல்வ நிலையும், உங்களைப் பற்றிய உங்களின் எண்ணங்களும் மேம்பட தொடங்கும். மல்லிகை பூவிற்கும், அதன் நறுமணத்திற்கும் இத்தகைய சூட்சமமான வலிமை உண்டு என எப்படி ஆன்மீக முன்னோர்கள் உறுதியாக குறிப்பிடுகிறார்கள்.

அதே தருணத்தில் மல்லிகை  பூச்செடியை நீங்கள் வளர்ப்பதாக இருந்தால் தொடர்ச்சியாக ஒரு தசாப்தம் வரை அதனை வளர்க்க வேண்டும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். அப்போதுதான் மல்லிகை பூக்களின் அதிர்வையும் பூப்பூக்கும் ஓசையையும் உங்களால் கேட்க இயலும். உணர இயலும். மல்லிகை பூ செடி உங்களுடைய வீட்டில் இருந்தால் அதனை வாடி வதங்காமல் பராமரிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் உங்களுடைய செல்வ நிலையில் மாற்றம் ஏற்படுவதை அனுபவத்தில் உணரலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments