அநுராதபுரத்தில் பெண் வைத்தியருக்கு ஏற்பட்ட கொடூரம் போன்று மீண்டும் நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்
~~~~~~~~~
அநுராதபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றிய பயிற்சி வைத்தியர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,
பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரின் எதிர்காலம் கருதி, அவர் தொடர்பான விபரங்கள் வெளிவராமல் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மிலேச்சத்தனமான குறித்த செயலில் ஈடுபட்ட சந்தேகநபர், சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டுள்ளமை ஆறுதல் அளிக்கின்ற போதிலும், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.