ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர்களுக்கும், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலேயே இவ்வாறு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது நியமனம் பெற்ற உறுப்பினர் ஒருவர் ராஜித சேனாரத்ன தொடர்பில் கருத்து தெரிவிக்க முற்பட்டபோது அதனை ரணில் விக்ரமசிங்க புறக்கணித்திருந்தார்.
இதன்போது ரணில் விக்ரமசிங்க உடனடியாக அவர்களை பேசவிடாது தடுத்து ஆசனத்தில் அமருமாறு பகிரங்கமாக கூறியுள்ளார்.
மேலும், தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் தொடர்பாக எழுந்த ஆட்சேபனைகள் காரணமாக பல தொகுதி அமைப்பாளர்களுக்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே சூடான விவாதம் ஏற்பட்டது.
எனினும் முறையான பதில் எதுவும் கிடைக்காத காரணத்தினால் குறித்த உறுப்பினர்கள் இருவரும் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.