ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகுலாகம பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (27) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெட்டிபொல, மகுலாகம பிரதேசத்தில் பன்றிகளை வேட்டையாடிக்கொண்டிருந்த நபரொருவர் சிலர் 9 வயதுடைய சிறுமி மற்றும் அவரது பாட்டி மீது தவறுதலாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்த சிறுமியும் பாட்டியும் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் ஹெட்டிபொல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் மகுலாகம பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மகுலாகம பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து வேட்டை துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.