இன்றைய திகதியில் எம்மில் பலரும் கடுமையாக உழைத்தாலும் , புத்திசாலித்தனமாக உழைத்தாலும் உங்களுடைய வளர்ச்சியை மற்றவர்கள் துல்லியமாக அவதானித்து கொண்டே இருக்கிறார்கள். உங்களுடைய உறவினர்கள் – நண்பர்கள்-குடும்ப உறுப்பினர்கள் – அக்கம் பக்கத்தினர் – என இவர்கள்தான் உங்களை தொடர்ச்சியாக அவதானிப்பவர்கள். ஆனால் அது நேரடியாக இருக்காது. மறைமுகமாகவே இருக்கும். பல தருணங்களில் இதனை எம்மால் அவதானிக்கவே இயலாது.
உதாரணத்திற்கு நன்றாக சென்று கொண்டிருந்த உங்களது வியாபாரம் உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்களில் யாரேனும் ஒருவர் விற்பனை நிலையத்திற்கு வருகை தந்த பிறகு அதில் மாற்றம் ஏற்படும்.
இதனை துல்லியமாக அவதானிக்க இயலாது. இதுபோன்ற மறைமுகமான எதிரிகளிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
உங்களுடைய விற்பனை நிலையம்- தொழிற்சாலை – அலுவலகம் – ஆகிய இடங்களில் யானை ஒன்றின் சிலையை ஆன்மீக பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்திலிருந்து வாங்கி வந்து வைத்து விட வேண்டும். யானை சிலை வாங்குவதற்கு பொருளாதார ரீதியாக பற்றாக்குறை உள்ளவர்கள் யானை புகைப்படத்தை வாங்கி உங்களுடைய விற்பனை நிலையத்தில் சுவரில் பதித்து விடுங்கள்.
இது உங்களுடைய விற்பனை நிலையத்திற்கு குருவின் அருளை பரிபூரணமாக பெற்றுத் தரும் வல்லமை படைத்தது. எதிரியை துவம்சம் செய்யக்கூடியது.
வேறு சிலர் எதிரி வெளியில் இல்லை வீட்டில் தான் இருக்கிறார்கள் என்று உணர்வார்கள். அவர்களிடம் இது தொடர்பாக வெளிப்படையாகவோ சூட்சமமாகவோ குறிப்பாகவோ கேட்க இயலாது.
இதுபோன்ற தருணத்தில் உங்களுடைய செல்வ வளம் குறையாமல் இருப்பதற்கும், எத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்வதற்கும் காமதேனுவின் சிலையையோ அல்லது காமதேனுவின் புகைப்படத்தையோ வாங்கி வந்து உங்களுடைய விற்பனை நிலையத்தில் வைத்து விட வேண்டும்.
இதற்கு வெள்ளிக்கிழமைகளில் காமதேனுவிற்கும், யானை சிலைக்கும் பூ வைத்து சாம்பிராணி புகை காட்டி வந்தால் உங்களுடைய மறைமுக எதிரி நண்பராகிவிடுவார். உங்களுடைய தொழிலும் செழிக்கும். வருமானமும் உயரும்.
இவ்விரண்டு சூட்சம குறிப்புகளை பாவித்து பாருங்கள் அதன் பிறகு செல்வ வளத்தில் உயர்வு ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம்.