சர்வதேச அளவில் புகழ்பெற்ற கெபிட்டல் பைனான்ஸ் இன்டர்நெஷனல் (CFI) மற்றும் குளோபல் பேங்கிங் என்ட் பைனான்ஸ் ரிவியு (GBFR) நிறுவனங்களினால் இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாகத் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாகவும் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளதை AIA இன்சூரன்ஸ் விமர்சையாகக் கொண்டாடி வருகிறது.
டிஜிட்டல் புதுமைகளினால் ஆதரிக்கப்படும் வாடிக்கையாளர் மகிழ்ச்சிக்கான AIAஇன் அர்ப்பணிப்பு அதன் வெற்றியின் அடிக்கல்லாகவே திகழ்ந்து வருகிறது.
கடந்த ஒரு வருடத்தில் காப்புறுதித் துறையில் புதிய தர நிலைகளை அமைக்கும் முன்னோடித் தீர்வுகளை அறிமுகப்படுத்தி நிறுவனம் தனது டிஜிட்டல் மாற்றப் பயணத்தைத் துரிதப்படுத்தியே உள்ளது.
அதிநவீன மனித மையப்படுத்தப்பட்ட பொயின்ட் ஒஃவ் சேல் (POS) அமைப்புகள் முதல் மேம்பட்ட ரோபோடிக் செயல்முறை ஓட்டோமேஷன் மற்றும் கிளவுட் அடிப்படையிலான மூலோபாயம் வரை AIA தொடர்ச்சியாக தனது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் வினைத்திறனான அனுபவங்களையே வழங்கி வருகின்றது. இதில் பிளேஸ் ஹெல்த், ஹை ஒக்டேன் பிட்னஸ் ஜிம்ஸ், சித்தாலேபே, மைடென்டிஸ்ட், விடா மெடிக்கல் கிளினிக், யுனி லிவர் பியுரிட், விஷன் கெயார் மற்றும் டொக் 990 ஆகியவற்றுடன் இணைந்து AIA வாடிக்கையாளர்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமன்றி ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்வதனையும் உறுதிசெய்கிறது.
நிறுவனத்தினுள் ஆதரவு மிக்க மற்றும் அதிகாரமளிக்கும் பணியிடத்தை உருவாக்குவதற்கான AIAஇன் அர்ப்பணிப்பானது அதற்கு மதிப்புமிக்க லெஜண்ட் (LEGEND) பட்டத்தினைப் பெற்றுத் தந்துள்ளதுடன் தொடர்ந்து 12வது வருடமாகவும் இலங்கையில் சிறந்த பணியிடமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இளம் திறமையாளர்களுக்கான சிறந்த பணியிடங்களில் ஒன்றாகவும் இந்த நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் பெண்களுக்கான சிறந்த பணியிடங்களில் ஒன்றாகத் தொடர்ந்தும் ஆறாவது வருடமாகவும் தனது நிலையினைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. இது நிறுவனமானது எவ்வித பாகுபாடும் இன்றி அனைவரையும் நிறுவனத்தினுள் உள்வாங்குகின்ற மற்றும் முற்போக்கான கலாசாரத்தினைப் பறைசாற்றுவதாகவே அமைகின்றது.
அத்துடன் AIA கிரேட் பிளேஸ் டுவேர்க் நிறுவனத்தினால் நல்லாழ்வு வெற்றியாளராக அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது ஒரேயொரு காப்புறுதி நிறுவனமாகவும் திகழ்கின்றது.