Thursday, March 13, 2025
spot_img
Homeவணிகம்பான் ஏசியா வங்கி 2024 நிதியாண்டில் 4.1 பில்லியனுக்கும் அதிகமான வரிக்கு பிந்தைய இலாபத்துடன் உயர்வான...

பான் ஏசியா வங்கி 2024 நிதியாண்டில் 4.1 பில்லியனுக்கும் அதிகமான வரிக்கு பிந்தைய இலாபத்துடன் உயர்வான செயல்திறனை அறிவித்துள்ளது.

நிகர வட்டி வருமானம் – ரூ. 12.13 பில்லியன், 18% ஆல் அதிகரித்துள்ளது.

நிகர கட்டணம் மற்றும் தரகு  வருமானம் – ரூ. 1.90 பில்லியன், 24% ஆல்  அதிகரித்துள்ளது.

நிதியியல்  சேவைகள் மீதான வரிகளுக்கு முந்தைய செயல்பாட்டு இலாபம் – ரூ. 7.90 பில்லியன், 137% ஆல் அதிகரித்துள்ளது. 

வரிக்கு முந்தைய இலாபம் – ரூ.6.03 பில்லியன், 159%ஆல்  அதிகரித்துள்ளது.

வரிக்குப் பிந்தைய லாபம்-ரூ.4.13 பில்லியன், 123%ஆல்  அதிகரித்துள்ளது.

மொத்த சொத்துக்கள் ரூ.29 பில்லியனால் அதிகரிப்பு , 13% ஆல் உயர்ந்துள்ளது.

மொத்தக் கடன் புத்தகம் ரூ. 21 பில்லியனால் அதிகரிப்பு , 15% ஆல் உயர்வு.  

வாடிக்கையாளர் பண வைப்புத் தளம் ரூ.16 பில்லியனால்  அதிகரித்துள்ளது, 9% அதிகரிப்பு 

அனைத்து முக்கிய இலாபத்தன்மை குறிகாட்டிகளும் குறிப்பிடத்தக்க வகையில் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன. 

– நிகர வட்டி வரம்பு – 4.93% (2023 – 4.67%)

– சொத்துகள் மீதான வருமானம்  (வரிக்கு முந்தைய)-2.45% (2023 – 1.06%) 

– சமப்பங்கு  மீதான வருமானம்  -17.30% (2023 – 8.62%)

– பங்கொன்றின்  வருமானம்  – ரூ. 9.34 (2023 – ரூ. 4.19)

• பிரதான  கடன் தர குறிகாட்டிகள் மேலும் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன 

– நிலை 3 கடன் விகிதம் 3.10% (2023-4.36%) ஆக அதிகரிப்பு 

– நிலை 3 ஒதுக்கீடு நிரப்பல்  60.10% (2023-47.13%) ஆக அதிகரிப்பு 

• வங்கியானது போதிய மூலதனத்தையும் சொத்துக்களையும் பேணுகிறது. அனைத்து ஒழுக்காற்று  மூலதன விகிதங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

– பொதுவான சமப்பங்கு அடுக்கு 1 விகிதம் – 19.17% (குறைந்தபட்ச ஒழுங்குமுறை – 7.00%) 

– அடுக்கு 1 மூலதன விகிதம்-19.17% (குறைந்தபட்ச ஒழுங்குமுறை- 8.50%) 

– மொத்த மூலதன விகிதம் – 20.98% (குறைந்தபட்ச ஒழுங்குமுறை -12.50%)

– மேம்படுத்தல் விகிதம் – 8.18% (குறைந்தபட்ச ஒழுங்குமுறை – 3%)

– அனைத்து நாணயம் LCR -344.37%, ரூபாய் LCR 264.10% (ஒழுங்குமுறை குறைந்தபட்சம் -100%)

– நிகர நிலையான நிதி விகிதம் -153.44% ( குறைந்தபட்ச ஒழுங்குமுறை -100%)

பான் ஏசியா பேங்கிங் கோர்ப்பரேஷன் பிஎல்சியானது சவாலான பேரண்ட -பொருளாதார சூழலில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் டிசம்பர் 31, 2024 இல் முடிவடைந்த ஆண்டில் சிறப்பான நிதிச் செயல்திறனைப் பதிவு செய்துள்ளதன் மூலம் படிப்படியாக புத்துயிர் பெற்று வருகிறது. 

 நிதியியல்  அடிப்படையில்,  வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) 123% மற்றும் வரிக்கு முந்தைய இலாபம் (PBT) 159% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளநிலையில் இலாபத்தை பதிவு செய்துள்ளதுடன் வங்கியானது கவனிக்கத்தக்க ஆண்டாக சென்ற ஆண்டில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 

இந்த வளர்ச்சியானது வலுவான துறை முகாமைத்துவம்   , இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் நேர்மறையான விளைவு மற்றும் நிலையான இலாபங்களை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும்.

இதன் விளைவாக, வங்கியானது  2024 நிதியாண்டில் வரிக்கு பிந்தைய இலாபமாக [PAT] ரூ. 4.13 பில்லியனையும்  பங்கொன்றின் வருமானமானது  (EPS), இரு மடங்குக்கு மேலாக  அதிகரித்து ரூ. 9.34யையும்  பதிவு செய்துள்ளது .வங்கியின் வலுவான செயல்திறன் பெறுபேறுகள்  வெளிப்புற சவால்களை திறமையாக வழிநடத்தும் வங்கியின் திறனால் அடையப்பட்டுள்ளன.

இந்த ஈர்க்கக்கூடிய செயல்திறனுக்கு ஏற்ப, பணிப்பாளர்கள் சபை  குழுவானது  பங்கி இலாபமாக பங்கொன்றுக்கு  ரூ. 1.00 யை முன்மொழிந்ததுடன் இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 4 மடங்காகும் . பங்கி இலாபத்தில்   இந்த உயர்வானது, 10%க்கும் அதிகமான பங்கிஇலாப   செலுத்துதல் விகிதத்துடன், மூலதனத் தக்கவைப்பு மற்றும் விநியோகத்திற்கு இடையே நிலையான சமநிலையைப் பேணும் நிலையில் அதன் பங்குதாரர்களுக்கு வெகுமதி அளிப்பதில் வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

2024 ஆம் ஆண்டில், இலங்கையின் பொருளாதாரமானது பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும் அதன் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்தது. உலக வங்கியின் கூற்றுப்படி, இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் 4.4% மிதமான வளர்ச்சியை  பதிவு செய்யும் என்று கணிக்கப்பட்டிருந்தது, இது 2022 இல் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சிக்குப் பின்னர் ஸ்திரத்தன்மையின் அறிகுறிகளைக் குறிப்பதாக உள்ளது.

இந்த வளர்ச்சியானது  முதன்மையாக தொழில்துறை துறையில், குறிப்பாக கட்டிட நிர்மாணம்  மற்றும் உணவு உற்பத்தி, சுற்றுலா தொடர்பான சேவைகளில் வலுவான செயல்திறன் ஆகியவற்றால் மீண்டும் இயக்கப்படுகிறது. சந்தை வட்டி விகிதங்கள், மே 2024 முதல் தனியார் துறைக்கு குறிப்பிடத்தக்க கடன் வளர்ச்சியை ஆதரிப்பதாக அமைந்தன.

அதிக இறக்குமதி செலவினங்களின் காரணமாக, பரந்த வர்த்தக பற்றாக்குறை இருந்தபோதிலும், IMF-EFF திட்டம், வெளி கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் வெற்றிகரமான முடிவு மற்றும் பலதரப்பு நிதி ஆதரவு ஆகியவற்றால் வலுவடைந்தது.

2024 ஆம் ஆண்டின் இறுதியில் தொழில்துறையில் 3.10% என்ற மிகக் குறைந்த நிலை 3 கடன் விகிதங்களில் ஒன்றைப் பராமரிப்பதில் வங்கியின் சொத்துத் தரத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பிரதிபலித்தது – இது எங்களின் கடுமையான கடன் இடர் முகாமைத்துவம்  மற்றும் எழுத்துறுதி தரநிலைகளுக்கு ஒரு சான்றாகும்.

மீளெழுச்சி செயற்பாடுகளுக்கு  அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள் சிக்கலானவையாக இருந்தபோதிலும், பாதிப்பைக் குறைப்பதற்காக வங்கி மீளெழுச்சிகளுக்கான யுக்திகளை முன்கூட்டியே செம்மைப்படுத்தியது. இதற்கிடையில், வங்கியின் நிலை 3 வழங்கல் பாதுகாப்பு விகிதம் 2023 இல் 47.13% இல் இருந்து 2024 இல் 60.10% ஆக அதிகரித்தது.

2023 ஆம் ஆண்டின்  பிற்பகுதியில் இருந்து, இலங்கை மத்திய வங்கியின் [CBSL]  நாணய சபையானது  இரண்டு முறை கொள்கை விகிதங்களைக் குறைக்க எடுத்த கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப, கடன் மற்றும் வைப்புத்தொகை ஆகிய இரண்டிற்கும் சந்தை வட்டி விகிதங்கள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன.

இதனால், 2024 ஆம் ஆண்டின் வங்கியின் வட்டி வருமானம், கடந்த ஆண்டு சந்தை நிலவரத்துடன் ஒப்பிடுகையில், 17% ஆல் குறைந்துள்ளது. மேலும், பணவைப்பு  புத்தகத்தில் வலுவான வளர்ச்சி இருந்தபோதிலும், குறைந்த வட்டி விகிதங்கள் நிலவியதால், 2024 ஆம் ஆண்டின் வட்டிச் செலவு 2023 ஆம் ஆண்டின் வட்டிச் செலவை விட 30% ஆல் குறைந்துள்ளது. இதன் விளைவாக, 2024 ஆம் ஆண்டில் நிகர வட்டி வருமானம் 18% ஆல்  அதிகரித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் வங்கியின் நிகர கட்டணம் மற்றும் தரகு  வருமானம் 24% ஆல் அதிகரித்துள்ளது, முக்கியமாக, நாட்டில் நிலவும் குறைந்த வட்டி விகித ஆட்சி மற்றும் பிற சாதகமான பேரண்ட -பொருளாதார காரணிகளின் விளைவாக கடன்களுக்கான தேவை அதிகரித்ததால்  கடன்கள் மற்றும் முன்பணங்களிலிருந்து உருவாக்கப்பட்ட கட்டண வருமானம் அதிகரித்தது. FVPL இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட இலங்கை அரசாங்க ரூபாய் பிணையப் பத்திரங்களின் மூலதன ஆதாயங்கள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக அறிக்கையிடல் காலத்தில் வர்த்தகத்தின் நிகர ஆதாயங்கள் 17% ஆல்  குறைந்துள்ளது.

அறிக்கையிடல் காலத்தில், வங்கியின் செயல்பாட்டுச் செலவுகள் 2023 ஆம் ஆண்டுடன்  ஒப்பிடும்போது 20%ஆல்  அதிகரித்ததுடன் ஊழியர்களின்  செலவுகள் 32% ஆல் அதிகரித்துள்ளன, முதன்மையாக ஊழியர்களின் சம்பளம், போனஸ் மற்றும் ஊழியர்களை அங்கீகரித்து தக்கவைத்துக் கொள்வதற்கான கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளன.

வங்கியின் செலவு-வருமான விகிதம் 2023 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியில் 50.06% ஆக இருந்த நிலையில்  262 அடிப்படைப் புள்ளிகளால் உயர்ந்து 52.68% ஐ எட்டியது. 01 ஜனவரி 2024 முதல் அதிகரித்த VAT அடிப்படை மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பொதுவான விலை அதிகரிப்பு காரணமாக செலவு அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும், வங்கியின் பயனுள்ள செலவு முகாமைத்துவ  உத்திகளின் காரணமாக மற்ற இயக்கச் செலவுகள் 12% ஆக அதிகரித்தது. செலவு -வருமான விகிதத்தில் இந்த அதிகரிப்பு முக்கியமாக மொத்த செயல்பாட்டு வருமானத்தின்  வளர்ச்சியை விட மொத்த இயக்க செலவுகளின் அதிகரிப்பால் உந்தப்பட்டது.

நிதியியல்  சேவைகள் மற்றும் வருமான வரிச் செலவுகள் மீதான வரிகள் மற்றும் அறவீடுகள் முக்கியமாக செயற்பாட்டு இலாபத்தின் அதிகரிப்பு காரணமாக அதிகரித்தன. 2024 ஆம் ஆண்டிற்கான வருமான வரிச் செலவில் செங்குத்தான அதிகரிப்பு, பெரும்பாலும் மேம்பட்ட செயற்பாட்டு  இலாபம் மற்றும் அதிகரித்த ஒத்தி வைக்கப்பட்ட வரிச் செலவுகள் ஆகியவற்றால் உந்தப்பட்டது, வரி மேல்முறையீட்டு செயல்முறையின் வெற்றிகரமான விளைவுகளின் அடிப்படையில் முந்தைய கால வருமான வரி விதிகளை மாற்றியமைப்பதன் மூலம் ஓரளவிற்கு நிராகரிக்கப்பட்டது.

மதிப்பாய்வின் கீழ் ஆண்டில், சமப்பங்கு மீதான வருவாய் (ROE) குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டது, முந்தைய ஆண்டில் 8.62% ஆக  இருந்த நிலையில் 17.30% ஆக உயர்ந்துள்ளது, இது ஒரு வருடத்திற்குள் இரட்டிப்பு நிலையை அடைந்துள்ளது . இந்த கணிசமான முன்னேற்றம், வலுவான வருவாய் வளர்ச்சி மற்றும் மேம்பட்ட செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றால் உந்தப்பட்டு, அதன் பங்குதாரர்களுக்கு அதிக வருமானத்தை உருவாக்கும் வங்கியின் திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இலாபத்தின் முக்கிய அளவீடான சொத்துகளின் மீதான வருவாய் (ROA), குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவுசெய்தது, இது 2023 இல் 0.84% இலிருந்து 2024 இல் 1.68% ஆக அதிகரித்துள்ளது. இந்த மேல்நோக்கிய முன்னேற்றமானது  வங்கியின் பயனுள்ள சொத்துப் பயன்பாடு மற்றும் விவேகமான இடர் முகாமைத்துவ  உத்திகளை எடுத்துக்காட்டுகிறது.  2024 ஆம் ஆண்டில்  மேம்படுத்தப்பட்ட நிகர வட்டி வரம்பு  (NIM) 4.93% யை பதிவு செய்ததுடன் இது  2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது  26 அடிப்படைப்  புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

நியாயமான இலாபம் அல்லது நஷ்டத்தில் (FVPL) நிதிச் சொத்துக்கள் மற்றும் பிற விரிவான வருமானம் (FVOCI) வகைகளின் மூலம் நியாயமான மதிப்பில் நிதிச் சொத்துகள் வகைப்படுத்தப்படுவதின் அடிப்படையில் வங்கியின் மொத்த சொத்துக்கள் முக்கியமாக கடன்கள் மற்றும் முன்பணங்கள் மற்றும் இலங்கை ரூபாவிலான அரசாங்கப் பிணையப்பத்திர  முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் 13% குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளன முக்கியமாக கோர்ப்பரேட் வங்கி மற்றும் SME வங்கிப் பிரிவுகளில் கடன் தேவை அதிகரித்ததன் காரணமாக, மதிப்பாய்வின் போது வங்கியின் கடன்கள் மற்றும் முன்பணங்கள் புத்தகம் 15% அதிகரித்துள்ளது.

இதற்கிடையில்,  2024 ஆம் ஆண்டின் முடிவில் வங்கியின் மொத்த வாடிக்கையாளர் பண வைப்புத் தளம் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவுசெய்தது. இதற்கிணங்க இது ரூ. 16 பில்லியனாக  இருந்த நிலையில் அல்லது 9%யை  கடந்து ரூபா  190 பில்லியனை பதிவு செய்தது. மேலும், நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளின் அபரிதமான வளர்ச்சி ரூ. 9 பில்லியன் CASA விகிதத்தை 2024 ஆம் ஆண்டில் 334 அடிப்படை புள்ளிகள்  மூலம் மேம்படுத்தியது.

பரிசீலிக்கப்பட்ட ஆண்டில், வங்கி ஒரு திடமான மூலதனம் மற்றும் பணப்புழக்க நிலையைப் பராமரித்து, ஆற்றல்மிக்க சூழலில் அதன் நிதியியல்  நிலையை வலுப்படுத்தியது. மூலதன இடையகங்கள் ஒழுங்குமுறை தேவைகளை விட அதிகமாக இருந்தன, இது விவேகமான முகாமைத்துவதை  பிரதிபலிக்கிறது.

பொதுவான சமபங்கு  அடுக்கு 1 மூலதன விகிதம் மற்றும் அடுக்கு 1 மூலதன விகிதம் 19.17% ஆக இருந்தது, இது முறையே 7% மற்றும் 8.50% என்ற குறைந்தபட்ச ஒழுங்குமுறை அளவை விட அதிகமாக உள்ளது.

மொத்த மூலதன விகிதம் 12.50% என்ற சட்டப்பூர்வ குறைந்த பட்சத்திற்கு எதிராக 20.98% ஆக உயர்ந்தது, இது மீளெழுச்சி, வளர்ச்சி திறனை உறுதி செய்கிறது. அதே சமயம், வங்கியின் அந்நியச் செலாவணி விகிதம், ஒழுங்குமுறைக் குறைந்தபட்சங்களுக்கு மேல் தரவரிசையில் உள்ளது, ஒரு வருடத்திற்கு முன்பு 7.60% ஆக இருந்த நிலையில்  2024 இல் 8.18% ஆக மேம்பட்டது.

2024 ஆம் ஆண்டில் கடன் புத்தகத்தில் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் காணப்பட்ட போதிலும், பணப்புழக்க நிலைகள் வலுவாக இருந்தது, அனைத்து நாணய பணப்புழக்க கவரேஜ் விகிதம் (LCR) 344.37% மற்றும் ரூபாய் LCR  264.10%, இவை இரண்டும் ஒழுங்குமுறை வரம்புகளை மிஞ்சுகின்றன .

153.44% இன் மேம்படுத்தப்பட்ட நிகர நிலையான நிதி விகிதம் (NSFR) படிப்படியாக மீள் எழுச்சி பெறும் பொருளாதார நிலைமைகளின் கீழ் நிலையான நிதியை திரட்டுவதில் வங்கியின் திறனை பிரதிபலிக்கிறது. இந்த வலுவான அளவீடுகள் நிதியியல்  ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான விரிவாக்கத்திற்கான வங்கியின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

வங்கியின் செயற்பாடுகள் குறித்து பான் ஏசியா வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளீன் எதிரிசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ‘’பான் ஏசியா வங்கியானது அடிப்படை விடயங்களை வழங்குவதன் மூலம் வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும் மீளெழுச்சியை  வெளிப்படுத்தி வருகின்றது. 2024 ஆம் ஆண்டிற்கான எங்களின் உறுதியான நிதி மற்றும் செயல்பாட்டு முடிவுகள், எங்கள் நிதி யியல் இலக்குகளை அடைய நாங்கள் சிறப்பான  நிலையில் உள்ளோம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

எங்கள் மொத்த சொத்துப் புத்தகத்தில் காணப்பட்ட வலுவான வளர்ச்சி, PAT இல் 123% அதிகரிப்புடன், எங்கள் மூலோபாயத்தின் செயல்திறனை வெளிப்படுத்துகிறது. மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துக் கிளைகளும் திரட்சி அடிப்படையில் இலாபங்களை ஈட்டி, புத்துயிர் பெற்று வரும்  தேசத்தின் நிலைப்பாட்டினை எடுத்தியம்புகின்றன.

எதிர்வரும் ஆண்டில் புதிய மைல்கற்களுக்கு வழி வகுத்து, தொழில்துறையில் சிறந்த குழுவின் ஆதரவுடன், எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்ற செயற்பாடுகளை  மேற்கொண்டு  வருவதால், புத்தாக்க உணர்வு பான் ஏசியா வங்கியை முன்னோக்கி நகர்த்துகிறது.’’.

பான் ஏசியா வங்கியானது வருடா வருடம் சீரான வளர்ச்சியைப் பதிவுசெய்து,  ‘உன்னதமான உள்நாட்டு வங்கியாக’வலுவாக நிலைநிறுத்தப்பட்டு, நாட்டின் செழுமைக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில் நிதியியல் பாதுகாப்பை ஊக்குவித்து வாடிக்கையாளர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments