NDB வங்கியானது பிரத்தியேகமான கவர்ச்சிகரமான கடனட்டையை [Affinity Credit Card] அறிமுகப்படுத்துவதற்காக பிஷப்ஸ் கல்லூரியுடன் இணைந்துள்ளது. NDB வங்கியானது இந்த பிரத்தியேகமான கவர்ச்சிகரமான கடனட்டையை அறிமுகப்படுத்தியதன் மூலம் பிஷப்ஸ் கல்லூரியின் மதிப்பிற்குரிய பழைய மாணவர்கள், தற்போதைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகம் ஏராளமான நிதியியல் நன்மைகள் மற்றும் சலுகைகளை பெறவுள்ளனர். இந்த குறிப்பிடத்தக்க பங்குடமைக்காக உத்தியோகபூர்வமாக கையொப்பமிடும் நிகழ்வானது ஜனவரி 29, 2025 அன்று NDB வங்கி மற்றும் பிஷப் கல்லூரியின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது, அதேவேளை பிஷப் கல்லூரியின் முக்கியமான 150வது ஆண்டுவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அட்டை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிஷப் கல்லூரிக்கான பிரத்தியேகமான கவர்ச்சிகர கடனட்டையானது பாடசாலையின் சமூகத்திற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இது அட்டைதாரர்களுக்கு நிதி வசதி மற்றும் பிரத்தியேக பலன்களின் வரிசையை வழங்குகிறது. இந்த பங்குடைமை தொடர்பாக கருத்து தெரிவித்த வங்கியின் உதவி துணைத்தலைவரும் , அட்டை நிலையத்தின் தலைவருமான அஷான் விக்கிரமநாயக்க “இந்த முன்முயற்சியானது, அவர்களின் உறுப்பினர்களுக்கு மதிப்பு சேர்க்கும் வகையில் குறிப்பிட்ட நிதியியல் தீர்வுகளை வழங்குவதன் மூலம் சமூகங்களுக்குள் அர்த்தமுள்ள இணைப்புகளை வளர்ப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. எனத் தெரிவித்தார்
பிஷப் கல்லூரியின் அதிபர் செமலிகுணதிலக ஹேரத், இந்த முயற்சிக்கு தனது பாராட்டினை தெரிவித்தார், “ எமது கல்லூரியானது 150ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் இவ்வேளையில் NDB போன்ற நம்பகமான வங்கியுடனான கூட்டு முயற்சியினை மேற்கொள்வது பரந்தளவில் உள்ள பிஷப் கல்லூரி சமூகமானது ஒவ்வொரு பரிவர்த்தனையின்போதிலும் பாடசாலைக்கு நன்மைகளை வழங்க உதவும்.“ எனத் தெரிவித்தார்.
பிஷப் கல்லூரிக்கான பிரத்தியேகமான கவர்ச்சிகர கடனட்டையை அறிமுகப்படுத்துவதன் மூலம், பிஷப் கல்லூரியின் பழைய மாணவர் வலையமைப்பின் செழுமையான பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடும் அதே வேளையில், புதுமையான நிதியியல் தீர்வுகள் மூலம் தனி நபர்களை வலுப்படுத்துவதில் அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதை NDB வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது.