Thursday, March 13, 2025
spot_img
Homeவணிகம்ChildFund Sri Lanka 40 ஆண்டுகால பூர்த்தியை கொண்டாடுவதுடன், WiDE Sri Lankaவினை அறிமுகப்படுத்துகிறது.

ChildFund Sri Lanka 40 ஆண்டுகால பூர்த்தியை கொண்டாடுவதுடன், WiDE Sri Lankaவினை அறிமுகப்படுத்துகிறது.

ChildFund Sri Lanka இந்நாட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் பணியின் 40ஆவது ஆண்டின் நிறைவை அண்மையில் கொண்டாடியது. இந்த மைல்கல்லை குறிப்பிடும் முகமாக இந்நிறுவனம் அதன் உள்நாட்டு செயன்முறைகளை வலுவூட்டும் நோக்கிலும், உள்நாட்டின் தலைமைத்துவ மற்றும் சமூகம் சார் முயற்சிகளுக்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுவூட்டும் நோக்கிலும் WiDE Lankaஇனை (Women and Children Development and Empowerment)அறிமுகப்படுத்தியது.

ஒரு குறுகிய சுற்றுப் பயணத்திற்காக நாட்டுக்கு வந்திருந்த ChildFund Internationalஇன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இஸாம் கானிம் 40ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து சிறப்பித்தார். 

தனது சுற்றுப் பயணத்தின்போது அவர் ஊழியர்களையும் பல்வேறு பங்குதாரர்களையும் சந்தித்ததுடன், அமுனு கும்பரயில் அமைந்துள்ள விருந்தோம்பல், உணவு தொழில்நுட்பம் மற்றும் கிராபிக் வடிவமைப்பு ஆகிய துறைகளில் மாற்றுத் திறனாளி இளைஞர்களின் திறன்களை வளர்க்கும் பணியில் செயற்படுகின்ற தொழிற்பயிற்சி மையத்தையும் பார்வையிட்டதுடன், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் ChildFund Sri Lankaஇன் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட சமூக மற்றும் உணர்வு ரீதியான கற்றல் (Social and Emotional Learning)  கட்டமைப்பின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டார்.

அனைவரையும் உள்வாங்கி செயற்படுவது ChildFund Sri Lankaஇன் பணியின் ஒரு முக்கிய கருப்பொருளாகும். ChildFund அதன் விரிவான திட்டத்தின் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் 1 மில்லியன் முகங்களில் புன்னகையைக் கொண்டுவரும் இலக்கை நிர்ணயித்துள்ளது. 

1938 இல் நிறுவப்பட்ட ChildFund International உலகம் முழுவதும் உள்ள குழுந்தைகள் மற்றும் குடும்பங்களின் நல்வாழ்வை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments