மாதவிலக்கு நெருங்கும்போது மார்பகங்களில் ஏற்படுகிற இந்த அறிகுறிகளுக்கும் ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் (premenstrual syndrome) பிரச்சினைதான் காரணம். மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள்.
இந்த அறிகுறிகள் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே ஆரம்பித்து, மாதவிலக்கின்போது உச்சத்தை அடைந்து, பிறகு தானாகவே சரியாகிவிடக்கூடியவை. பயப்படத் தேவையில்லை. அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது.