‘ஜெய் பீம்’ புகழ் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ஜென்டில்வுமன்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பசில் ஜோசப் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தின் உருவாகியுள்ள ‘ ஜென்டில்வுமன்’ எனும் திரைப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், லொஸ்லியா, ஹரிகிருஷ்ணன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சா. காத்தவராயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இன்வெஸ்டிகேட் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் ட்ராப் ஓஸன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கதையின் நாயகன் காணாமல் போனதன் பின்னணி குறித்து சுவாரசியமான திருப்பங்களுடன் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய நேர் நிலையான அதிர்வு ஏற்பட்டிருக்கிறது.