நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மாஸ்க்’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்க்: எனும் திரைப்படத்தில் கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா, சார்லி, பால சரவணன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ஆர். டி .ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை டி எஸ் எம் ஜி ஒ நிறுவனம் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆண்ட்ரியா மற்றும் எஸ். பி. சொக்கலிங்கம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பனி வழங்குகிறது.
இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக படக்குழுவினர் நான்கு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். இதில் படத்தின் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் நடிகை ஆண்ட்ரியா எதிர்மறையான வேடத்தில் நடிக்கிறார் என தெரிய வருகிறது. இதனால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.