ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணைவதற்கான பேச்சுக்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில் மாற்று கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிந்தித்து வருகின்றார்.பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக்கட்சி உட்பட பல்வேறு கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி ஒன்றை அமைத்து அடுத்த கட்ட செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.