கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பல்வராயன்கட்டு – வலைப்பாடு பிரதான வீதியைப் புனரமைப்பதற்குரிய ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது.
மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருந்த இவ்வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் என்னிடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் இதற்குரிய நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான இந்த வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையால் 1,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படுகின்றது.
கடல் தொழில் அமைச்சர் சந்திரசேகரன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பாஸ்கரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், பூநகரி பிரதேச செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ம.மோகன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இவ்வீதியை புனரமைப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்ததில் இவர்களின் பங்களிப்பும் அளப்பரியது.
வடக்கு மாகாண வீதி அபிவிருத்திக்காக பாதீட்டிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.