Friday, March 14, 2025
spot_img
Homeமங்கையர் குறிப்புசர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு ஓவியப்போட்டி

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு ஓவியப்போட்டி

சர்வதேச மகளிர் தினமாகிய மார்ச் 8ஆம் திகதி அன்று கொழும்பில் நேரடியான  ஓவியப் போட்டி ஒன்றை நடத்த புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்போட்டியில் 16 வயதுக்கும் 25 வயதுக்கும் உட்பட்ட மகளிர் மட்டும் பங்குபற்ற முடியும். கலந்து கொள்ள விரும்புவோர் 0754880172 என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொண்டுமேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.  

குறிப்பாக க.பொ.த உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவிகளுக்குமுன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.

மேற்படி போட்டிக்கான நிபந்தனைகள் வருமாறு:-

இப்போட்டி தனியாக வர்ணங்களால் வரையப்படும்  ஓவியங்களுக்கான போட்டியாக மட்டும் நடத்தப்படும். 

அவை மரபு  ஓவியங்களாகவோ நவீன  ஓவியமாகவோ அமையலாம்

ஓவியம் வரைவதற்கான கருப்பொருள் போட்டியன்று வழங்கப்படும்.

ஓவியம் பிரிஸ்டல் போர்ட்டில் மட்டுமே வரையப்பட வேண்டும்.

போர்ட் மற்றும் வர்ணங்கள் மற்றும் தேவையான உபகரணங்களை  போட்டியாளரே கொண்டு வரவேண்டும்.

காலை 9 மணி முதல் 10 மணிவரை ஒரு மணிநேரம் வரைதலுக்காக வழங்கப்படும்.

வரையப்பட்ட  ஓவியங்கள் யாவும் காட்சிப்படுத்தப்பட்டு நடுவர்களின் பார்வையிடுத லுக்கு பின் முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.

போட்டி நடைபெறும் இடம் மற்றும் விபரங்கள் விண்ணப்பதாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

முதல் பரிசாக ரூபா 5000 மற்றும் சான்றிதழும் இரண்டாம் பரிசாக ரூபா 3000 மற்றும் சான்றிதழும் மூன்றாம் பரிசாக ரூபா2000 மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்

10இதற்கான விருதுகள் எதிர்வரும் 30.01.2026 நடைபெறும் கலாமித்ரா ஸ்தாபக விழாவில் வழங்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments