குடும்ப உறவுகளின் வலிமையை உரத்து பேசும் பெயரிடப்படாத திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சசிகுமார், சத்யராஜ், பரத், ஆகியோர் இணைந்திருப்பதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் எம். குரு இயக்கத்தில் உருவாகவுள்ள பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் சசிகுமார், சத்யராஜ், பரத் ஆகிய மூவரும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் மேகா ஷெட்டி ,மாளவிகா, எம். எஸ். பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு , இந்துமதி, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எஸ். ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசை அமைக்கிறார். பீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஜம்பாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தர்மராஜ் வேலுசாமி தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் பத்தாம் திகதி முதல் தமிழக நகரமான பட்டுக்கோட்டையில் தொடங்குகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.