Friday, March 14, 2025
spot_img
Homeவணிகம்இலங்கையில் Big Match குதூகலம்: டயலொக் தொலைக்காட்சி, ViU App மற்றும் ThePapare.comஇல் பாருங்கள்!

இலங்கையில் Big Match குதூகலம்: டயலொக் தொலைக்காட்சி, ViU App மற்றும் ThePapare.comஇல் பாருங்கள்!

லங்கையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த மிகப் பெரிய தருணம் வந்துவிட்டது!

இலங்கையின் முதல்தர  கட்டண தொலைக்காட்சி வழங்குநரான டயலொக் தொலைக்காட்சி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பள்ளிகளுக்கான Big Match சீசன் 2025ஐ ஒளிபரப்ப தயாராக உள்ளது. பெப்ரவரி 21 முதல் ஏப்ரல் 26 வரை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்த்த Big Match சீசனில் வருங்கால கிரிக்கெட் நட்சத்திரங்கள் தங்களது எதிராளிகளை எதிர்கொள்வதை பார்க்க முடியும்.

இந்த சீசனின் மிக முக்கியமான போட்டிகளில், 108வது Battle of the Golds – யாழ்ப்பாணம் (செயின்ட் பேட்ரிக் கல்லூரி vs. யாழ்ப்பாண கல்லூரி – பெப்ரவரி 27, 28, மார்ச் 1), மற்றும் 75வது Battle of the Golds – மொரட்டுவை (செயின்ட் செபாஸ்டியன் கல்லூரி vs. பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி – பெப்ரவரி 28, மார்ச் 1, 2) ஆகிய முக்கியமான கிரிக்கெட் தருணங்கள் இடம்பெறுகின்றன.

மேலும், 146வது Battle of the Blues (ராயல் கல்லூரி vs S. தாமஸ் கல்லூரி), 4வது Luke Shield (செயின்ட் பெனடிக்ட் கல்லூரி vs. வெஸ்லி கல்லூரி), 120வது Lovers’ Quarrel (ரிச்மண்ட் கல்லூரி vs மகிந்த கல்லூரி), மற்றும் 91வது Battle of the Saints (செயின்ட் ஜோசப் கல்லூரி vs. செயின்ட் பீட்டர் கல்லூரி) போன்ற பல பிரசித்திபெற்ற மோதல்கள் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட கிரிக்கெட் அனுபவத்தை அளிக்க இருக்கின்றன. முழு போட்டி அட்டவணையை dialog.lk இல் பார்வையிடலாம்.

இந்த பரபரப்பான கிரிக்கெட் சீசனை Dialog Television-ல் ThePapare 1 (Channel No. 62), The Papare 2 (Channel No. 63) மற்றும் ThePapare 1 HD (Channel No. 126) ஆகிய சேனல்களில் நேரலையாக பார்வையிடலாம். 

மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் Dialog ViU Hub மற்றும் ViU Mini ஆகியவற்றின் மூலம் 72 மணிநேரம் வரை போட்டிகளை மீண்டும் பார்ப்பதற்கான வசதியினைப் பெற முடியும். Dialog ViU App மூலம் மொபைல் வழியாக எங்கிருந்தும் போட்டிகளை எந்தவொரு டேட்டா கட்டணமும் இல்லாமல் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யலாம். கூடுதலாக, விளையாட்டுகளை www.thepapare.com இலிருந்து உலகெங்கிலும் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யலா ம் மற்றும் ThePapare Facebook மற்றும் YouTube மீடியா சேனல்கள் மூலம், பார்வையாளர்கள் எங்கிருந்தும் விளையாட்டுகளைப் பின்தொடர பரந்த அளவிலான வழிகளை வழங்குகிறது.

ThePapare சேனலை subscribe செய்ய, MyDialog App, dialog.lk அல்லது “ON (வெற்றிடம்) Dialog Television இணைப்பு எண் (வெற்றிடம்) சேனல் எண்” என டைப் செய்து 0770 679 679 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்.

உங்கள் விருப்பம் டெஸ்ட் கிரிக்கெட்டா? அல்லது வேகமான லிமிட்டெட் ஓவர்ஸா? எதுவாக இருந்தாலும், ThePapare Channel Network உங்கள் Big Match  சீசனை முழுமையாக அனுபவிக்க முழு வசதிகளுடன் தயாராக உள்ளது! 

பெப்ரவரி 21 முதல் தொடங்கி, இந்த இருமாத கிரிக்கெட் திருவிழாவை Dialog Television, Dialog ViU App மற்றும் www.thepapare.com இல் தொலைத்துவிடாமல் பாருங்கள்!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments