வவுனியா வயல்வெளி தேவகுளம் பகுதியிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலிருந்து உந்துருளி, பை, பாதணி மற்றும் தலைக்கவசம் என்பன மீட்கப்பட்டுள்ளன.