நிலாவெளி பிரதான வீதியில் விபத்து; சாரதி வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த சாரதி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின்மீது பின்னால் வந்த முச்சக்கர வண்டி மோதியதன் காரணமாக குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் முன்னால் மாடு குறுக்கிட்டதன் காரணமாக குறித்த டிப்பர் வாகனம் மாட்டில் மோதுவதை தவிர்ப்பதற்காக சடுதியாக வேகத்தை குறைத்த நிலையில் பின்னால் வந்த முச்சக்கரவண்டி மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்துச் சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றுப்பட்டுள்ளார்.