நீதிபதி இளஞ்செழியன் ஐயா அவர்களின் பெயருக்கு கலங்கம் விளைவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்!
பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க பயன்படுத்திய அதே உத்தியை கையில் எடுக்கும் அர்ச்சுனா
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தனது கட்சித்தலைவர் இலங்கையில் கணித பிரிவில் முதலாவதாக வந்த மயூரன் தான் என பிரச்சாரங்களை முடுக்கிவிட்டார் மயூரன் சொல்வதை தான் கட்சி கேட்டு நடக்கும் என்றும் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்தால் மயூரன் தான் பாராளுமன்றம் அனுப்பப்படுவார் என்றும் பல பொய்கள் கூறப்பட்டது.
ஆனால் அர்ச்சுனாவின் தந்திரத்தை மயூரன் புரிந்துகொள்ளவில்லை, மயூரனும் யோகபாலனும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
தேர்தல் முடிந்ததும் 28 வருட நண்பர்களான மயூரனும் யோகபாலனும் துரோகிப்பட்டம் கொடுக்கப்பட்டு சுயேட்சைக்குழுவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
அர்ச்சுனாவின் வங்கிக்கணக்குகளிலும் புலம்பெயர் தமிழர்களின் பணம் நிரம்பியது , வாக்குகளும் கிடைத்தது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தார் அதே உத்தியை தான் யாழ்ப்பாண மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதற்காக மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
இப்போது முன்னாள் நீதிபதி இளஞ்செளியன் ஐயா தான் தனது கட்சியின் தலைவர் என்று பிரச்சாரங்கள் முகநூல் யூரியூப் ஊடாக ஆரம்பிக்கப்பட்டு பிரசாரம் செய்து வருகிறார்
இது இளஞ்செழியன் ஐயாவுக்கு தெரியுமோ தெரியாதோ என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்து உள்ளது
யாராவது இதனை இளஞ்செழியன் ஐயாவின் கவனத்திற்கு கொண்டு சென்று சேர்க்குமாறும் மக்கள் கேட்டு நிக்கின்றனர்
கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று ஒரு தெளிவுபடுத்தலை செய்ய நீதிபதி இளஞ்செழியன் ஐயா வெளியிட வேண்டும் என்றும் கேட்டு நிக்கின்றனர்
நீதிபதிகளையும் சட்டத்தரணிகளையும் மோசமாக விமர்சிக்கும் , கேவலமான வகையில் சமூக வலைத்தளங்களில் செயற்படும் ஒரு நபருடன் இளஞ்செழியன் ஐயா ஒருபscreenshoசேர மாட்டார்.
இளஞ்செழியன் அவர்கள் பல காவாலிகளையும் கிறிமினல்களையும் ஏற்கனவே நீதிமன்றங்களில் பார்த்திருப்பார் ஆகவே மக்களை முட்டாளாக்கும் இந்த போலிப்பிரச்சாரத்திற்கு ஐயா ஒரு முடிவு கட்டவேண்டும்.
என சமூக ஆர்வலர்கள் கருத்து வெயிட்டு உள்ளனர்.
யாழ் நிரூபர்