இனங்களுக்கிடையே புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் இப்தார் நிகழ்வு
மூதூர் சிவில் ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) மூதூர்-பேர்ல் கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
மூதூர் பிரதேசவாழ் பல்லின சமூகங்களிடையே புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், சர்வமதத் தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மூதூர் சிவில் ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வுக்கு மூதூர் 3CD நிறுவனம் அணுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.