குழந்தைகளிற்கான போர்வையில் போர்த்தப்பட்டு தந்தையின் அரவணைப்புடன் ஷாம் அல் சான்பாரி,இரண்டுகிழமைக்கு முன்னர் மிகவும் கடினமான முயற்சியின் பின்னர் சாத்தியமான யுத்த நிறுத்தம் காரணமாக காசாவில் ஒரளவு அமைதி நிலவிய இரண்டு கிழமைக்கு முன்னர் உலகிற்கு வந்தார்.
எனினும் காசா யுத்தம் அவளின் உயிரையும் பறித்தது.
திங்கட்கிழமை இரவு காசாவில் சமீபத்தில் கடும் குளிரினால் உயிரிழந்த ஏழு குழந்தைகளில் ஒருவராகஷாம் அல் சான்பாரி மாறினாள்.சுகாதார அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
அவளது குடும்பம் ஆயிரக்கணக்கான ஏனைய பொதுமக்கள் போல கடும் குளிரில் தற்காலிக கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களால் அவர்களின் வீடுகள் வாழமுடியாதவையாக மாற்றப்பட்ட பின்னரே அவர்கள் தற்காலிக கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர்.
நள்ளிரவு குழந்தையின் தாயார் அவளை உறங்கச்செய்தார் என தந்தை முகமட் தவ்பீக் அல்சன்பாரி என்பிசி செய்தியாளர்களிற்குஇதனை தெரிவித்தார்.
காசாவின் வடக்குகிழக்கில் உள்ள பெய்ட் இன் கனூனில் அவர் இதனை தெரிவித்தார்.
காலையில் அவளை நாங்கள் எழுப்ப முயன்றோம் அவள் எழும்பவில்லை என அவர் தெரிவித்தார்.
தனது மகளின் சிறிய உடல் சிறிய புதைகுழிக்குள் வைக்கப்படுவதை பார்த்தபடி அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரகாலப்பகுதியில் கடும் குளிரால் மேலும் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளன என காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் முனீர் அல் பேர்ஸ் தெரிவித்தார்.
காசாவில் வீடுகள் அழிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களிலும் ஏனைய தற்காலிக தங்குமிடங்களிலும் உறங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.