சூடானின் இராணுவவிமானவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
ஓம்டேர்மன் நகரில் இடம்பெற்ற இந்த விமானவிபத்தில் பெண்கள் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
ஓம்டேர்மன் நகரில் மக்கள் நெரிசலாக வாழும் பகுதியில் சூடான் இராணுவத்தின் அன்டொனோவ் விழுந்து நொருங்கியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.வடிசைட்னா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட விமானமே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளது.
உயிரிழந்தவர்களில் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் சிலரும் உள்ளனர்.
விமானம் விழுந்து நொருங்கியவேளை பாரிய வெடிப்பு சத்தங்களை கேட்டதாகவும் புகைமண்டலம் எழுந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.