முன்னாள் ஜனாதிபதிகள் பாதாளஉலககுழுக்களை பயன்படுத்தி பல குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில்வட்டகல நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜேஆர்ஜெயவர்த்தன கோனவல சுனிலை பயன்படுத்தி உயர்நீதிமன்ற நீதியரசரின் வீட்டின் மீது கல்வீச்சினை மேற்கொண்டார் என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பாதாளகுழுக்களை பயன்படுத்தி பத்திரிகையாளர் ரிச்சர்ட் டி சொய்சாவை கடத்தி கொலை செய்தார் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள ராணி திரைப்படம் ரிச்சர்ட் டிசொய்சா தொடர்பானது என குறிப்பிட்டுள்ள அவர் எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவை இந்த திரைப்படத்தை பார்வையிட்டு ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தனது தந்தை என்ன செய்தார் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டு; என தெரிவித்துள்ள அவர் முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்சவிற்கு யுலம்பிட்டிய அமரே வம்பொட்டா போன்றவர்களுடன் தொடர்பிருந்தது,யுலம்பிட்டிய நாமல் ராஜபக்சவின் மெய்பாதுகாவலராகயிருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.’