இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களுடைய சக்திக்கு ஏற்ற அளவில் கடனை வாங்கி, போட்டிகள் அதிகரித்து விட்டதால் குறைவான லாபத்திற்கு தங்களுக்கு நன்கு தெரிந்த தொழிலை செய்து வருகிறார்கள்.
இவர்கள் தொழிலில் எப்போதாவது ஜாக்பாட் கிடைக்கும் என்று அதாவது அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று காத்திருப்பார்கள்.
இந்தத் தருணத்தில் உங்களுக்கான அதிர்ஷ்ட புள்ளியையும், அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் ஆலயத்தை அறிந்து கொள்வதற்கான சூட்சம குறிப்பை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் அருளியிருக்கிறார்கள்.
ஒருவருடைய ஜாதகத்தில் உங்களுக்கு லாபத்தை அள்ளித் தரும் லக்னம் நின்ற இடத்திலிருந்து இரண்டாம் இடம் மற்றும் பதினோராம் இடத்திற்குரிய லக்கன நேரங்களை சூரிய உதயத்தை முன்னிட்டு நாளாந்தம் மாறிக்கொண்டிருக்கும்.
இந்தத் தருணத்தில் உங்களுடைய லாபம் தரும் லக்னத்தின் அல்லது தற்போது கடந்து சென்று கொண்டிருக்கும் லக்னம் நின்ற வீட்டில் நடு நாயகமான நட்சத்திர பாதத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
அதுதான் உங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் நட்சத்திர பாதமாகும். உதாரணத்திற்கு நீங்கள் எந்த லக்னமாக இருந்தாலும் உங்களுடைய இரண்டாவது மற்றும் பதினோராவது லக்னம் கடகமாக இருந்தால் கடகத்தில் உள்ள நட்சத்திரங்களின் ஒன்பது பாதங்களை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதில் நடுநாயகமான பாதம் அதாவது ஐந்தாவது பாதம் எந்த நட்சத்திரத்தின் பாதமாக இருக்கிறதோ.. அதுதான் உங்களுக்கான அதிர்ஷ்ட புள்ளி.
அந்த வகையில் உங்களுக்கு பூசம் நட்சத்திரம் நான்காம் பாதம் தான் உங்களின் அதிர்ஷ்ட புள்ளி. இந்த பூச நட்சத்திரம் நான்காம் பாதத்தை கடந்து சென்று கொண்டிருக்கும் தருணத்தில் நீங்கள் புதிய காரியத்தை தொடங்கினாலும் அல்லது விற்பனை நிலையத்தின் விற்பனையை தொடங்கினாலும் லாபம் கிடைக்கும்.
அதேபோல் உங்களுடைய ஜாதகத்தில் கிரக வலிமை பெற்று நிற்கும் கிரகம் எது என்று அவதானியங்கள். அந்த கிரகம் உங்களுடைய ராசி கட்டத்தில் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதையும் அவதானியுங்கள்..
அந்த ராசி கட்டத்திற்குரிய திசையையும் துல்லியமாக அவதானித்துக் கொள்ளுங்கள். இதனைத் தொடர்ந்து உங்களது வீட்டில் இருந்து அந்த ராசி கட்டத்திற்குரிய திசை இருக்கும் பகுதியில் அமைந்திருக்கும் முதலாவது ஆலயம் தான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் ஆலயம் ஆகும்.
உதாரணத்திற்கு உங்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலிமை பெற்றிருந்தால் அந்த கிரகம் உங்களுடைய ராசி கட்டத்தில் எதில் இருக்கிறதோ அந்த திசையில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட தொடங்கினால் குறிப்பாக நீங்க பிறந்த கிழமையன்று அந்த முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட தொடங்கினால் உங்களுடைய அதிர்ஷ்டம் சாத்தியமாகி லாபம் பெறுவீர்கள்.