Friday, March 14, 2025
spot_img
Homeவணிகம்30 பாடசாலைகளுக்கு வீதி பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் 'சியெட்கெயார்ஸ்'.

30 பாடசாலைகளுக்கு வீதி பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் ‘சியெட்கெயார்ஸ்’.

நாட்டின் முன்னணி டயர் உற்பத்தியாளரான சியெட் களனி ஹோல்டிங்ஸ், பாடசாலை மாணவர்களுக்கான வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் 15வது வருடத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், இத்திட்டத்தின் மூலம் இலங்கையிலுள்ள 30 பாடசாலைகள்  போக்குவரத்து மற்றும் பாதசாரி முகாமைத்துவத்திற்கான உபகரணங்களைப் பெற்றுள்ளன.

‘சியெட்கெயார்ஸ்’ தொடர் சமூகத்திட்டங்களின் ஒரு பகுதியான இந்த முயற்சியின் கீழ், இந்த பயனாளி பாடசாலைகள் ஒவ்வொன்றும் தமது பாடசாலைக்கு வெளியே வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்டு ஐந்து வழிகாட்டி பலகைகள், 10 போக்குவரத்து கூம்புகள் மற்றும் 10 போக்குவரத்து பாதுகாவலர் ஜாக்கெட்டுகளை பெற்றுள்ளன.

2024 ஆம் ஆண்டிற்காக அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளுக்கு வீதி பாதுகாப்பு சாதனங்களை வழங்குதல் நிறைவடைந்த நிலையில், இன்று வரை இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பாடசாலைகள் 2025 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் வீதிப்பாதுகாப்பு தொடர்பான சாதனங்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘பாதுகாப்பு என்பது சியெட் அக்கறை செலுத்தும் பிரதான விடயமாகும். ஏனெனில் நாங்கள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு டயருக்கும் இது ஒரு பிரதான அம்சமாக திகழ்கிறது’ என்று சியெட் களனியின் பிரதமசெயற்பாட்டுஅதிகாரி ஷமல் குணவர்தன கருத்துத் தெரிவித்தார்.’ 

சமீபத்தில் வழங்கப்பட்ட வீதி பாதுகாப்பு உபகரணங்களினால் பயனடைந்த பாடசாலைகள் ஆன்வெலிமடை மத்திய பாடசாலை மற்றும் வெலிமடையில் உள்ள வெலிமட விஜய வித்தியாலயம்;, தர்மதுத வித்யாலயா, பதுளை; றோயல் கல்லூரி, மொனராகலை ரஹீமியா வித்தியாலயம், அக்கரைப்பற்று; பாத்திமா கல்லூரி, கல்முனை ஏறாவூரில் அல்முனீராபாலிகா மகா வித்தியாலயம் மற்றும்அலிகார் மத்திய கல்லூரி;, ஓட்டமாவடி; புனித சவேரியார் மத்திய கல்லூரி, மாரவில்புனிதசெபஸ்டியன்கல்லூரி, மாதம்பே; வித்யாதர்சமகாவித்யாலயா, நொச்சியாகம் ராஜாபிம மஹாவித்யாலயா, நிக்கவெரட்டிய்குருநாகலிலுள்ளமலியதேவமாதிரிப்பாடசாலைமற்றும்ஸ்ரீநிஸ்ஸங்க மஹா வித்தியாலயம்;, எல்வெலவித்யாலயா, உக்குவெல இந்து தேசிய கல்லூரி, புஸ்ஸல்லாவ்ளூபிலிமத்தலாவ தேசிய பாடசாலை, பிலிமத்தலாவ் புனித ஜோசப்  பெண்கள் கல்லூரி, கேகாலை சரிபுத்த ஆரம்பப்பாடசாலை, அலவ்வர் புனித பால் பாலிகா வித்தியாலயம், களனி, விசாகாபாலிகாவித்யாலயா, மாகொல ஜெயக்கொடி மகாவித்தியாலயம், கணேமுல்ல்தெவலபொல ஆனந்த மஹாவித்தியாலயம், மினுவாங்கொடைபஹத்கம றோமன் கத்தோலிக்க கனிஷ்ட பாடசாலை, ஹன்வெல்ல மொரட்டு மஹா வித்தியாலய, மொரட்டுவஆனந்தகல்லூரி, மத்துகம் காமினி மத்தியகல்லூரி, பெந்தோட்டை தர்மசோகா கல்லூரி, அம்பலாங்கொடை மற்றும் விஜயபா தேசியபாடசாலை, ஹங்கம.

இலங்கையின் நியூமேடிக்டயர் தேவைகளில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீதத்தை உற்பத்தி செய்யும் சியெட் கூட்டு முயற்சியில் இலங்கையில் கடந்த தசாப்தத்தில் மட்டும் 8.5 பில்லியனுக்கு மேற்பட்ட முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. 

சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் அதன் உற்பத்திகளில் சுமார் 20 வீதத்தை உலகின் 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. இதன்மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு அந்நிய செலவாணிகளை சேகரிக்கும் விடயத்திலும், இறக்குமதி செய்யப்படும் டயர்கள் மீதான சார்புநிலையிலிருந்து விடுபடுவதற்கும் பெறும் பங்களிப்பை வழங்குகின்றது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments