கேகாலை – திவுல பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல் சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கேகாலை – திவுல பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய மூதாட்டி ஆவார்.
காணித் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மூதாட்டி சுமார் 02 மாத காலமாக கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.