Thursday, March 13, 2025
spot_img
Homeமரண அறிவித்தல்கள்31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோண் பொஸ்கோ ஜெகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்

நிலையாய் என்றும் எங்களோடு எங்களின்

இறைவனாய்- என்றும்எங்களை வழிநடத்த வணங்குகிறோம்.
முப்பத்தொன்று நாட்கள் போனாலும்முப்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்குஇதயத்திலும் வைக்கவில்லையப்பாஉயிராய் வைத்திருக்கின்றோம்..!!
நாட்கள் எத்தனை போனாலும்பாசப்பிணைப்பினால் நாம் பலரும்தவிக்கின்றோம் இல்லத்தின்சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்சாந்திக்காய் வேண்டுகின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 


அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 06-03-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 8.00 மணியளவில் தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இதனைத்தொடர்ந்து தாளையடியில் அமைந்துள்ள அவரது இல்லத்திலும், STADE DE FRANCE இல் உள்ள மகளின் இல்லத்திலும் நடைபெறும் மதிய இரவு போசன நிகழ்வில் கலந்து அப்பாவின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும் வண்ணம் தங்களையும் தங்கள் குடும்ப சகிதம் அன்புடன் அழைக்கின்றோம். 

இங்ஙனம்,குடும்பத்தினர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments