Thursday, March 13, 2025
spot_img
Homeவணிகம்தொழிற்துறை நிபுணர்களின் நேரடி செயல்முறை விளக்கங்களுடன் Retail ITயினரால் நடத்தப்பட்ட Retail Tech நிகழ்வு

தொழிற்துறை நிபுணர்களின் நேரடி செயல்முறை விளக்கங்களுடன் Retail ITயினரால் நடத்தப்பட்ட Retail Tech நிகழ்வு

இலங்கையின் முன்னணி Retail IT தீர்வுகளை வழங்கும் Retail IT (தனியார்) நிறுவனம் அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் ‘Retail Technology Trends 2025’ நிகழ்வை நடத்தியதன் வாயிலாக சந்தையில் அதன் முதல்  தரத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த நிகழ்வில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் என்பவற்றைப் போன்றே ஆடை விற்பனை நிலையங்கள், சிறப்பு அங்காடிகள் என்பவற்றுடன் புத்தகக் கடைகள் போன்ற விருந்தோம்பல் துறைகளைச் சார்ந்த 150க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரத் தொழில் துறையினர் ஒன்றுகூடியதுடன், சில்லறை வியாபாரத்தை இன்றைய தொழில்நுட்பத்திற்கேற்ப மாற்றியமைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புத்தாக்கங்கள் தொடர்பில் ஆழமான விளக்கம் அளிக்கப்பட்டது.

Retail ITயின் புத்தாக்கங்களின் வினைத்திறன், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகள் என்பவற்றுடன் வர்த்தக நடவடிக்கைகளை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் மூலோபாயங்களும் பங்குதாரர்கள் தொடர்பான தெளிவான புரிதலும் இந்நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்குக் கிட்டியது.

உலகின் முன்னணி Point of Sale (POS) சாதனங்களான Posiflexஉடனான, Retail ITயின் இணைப்பு, இந்த நிகழ்வில் முக்கியமாகக் கொண்டாடப்பட்டது. 

15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிணைப்பு இலங்கையின் சந்தைக்குப் பொருந்துகின்றவாறு வலுவான உயர் செயற்றிறன் கொண்ட POS தீர்வுகளை வழங்கியுள்ளது. 

Posiflexஇன் புகழ்பெற்ற நம்பகத்தன்மை மற்றும் சுநவயடை ஐவு யின் சிறப்பு வாய்ந்த சேவையூடாக அவர்களுடைய வாடிக்கையாளர்களின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்தும் சிறப்பாகப் கொண்டு நடத்தப்படுகின்றன.

Posiflexஇன் நம்பகத்தன்மை, அதன் நற்பெயர் என்பவற்றோடு Retail ITயின் நீண்டகால அனுபவம் வாய்ந்த தனித்துவமான சேவைகள் காரணமாக அனைத்து அளவுகளிலுமான வாடிக்கையாளர்களும் இதனை விருப்பத்துடன் தெரிவுசெய்கின்றனர்.

பங்காண்மையின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடுகையில், Retail IT துறையின் வர்த்தக அபிவிருத்தித் தலைமை அதிகாரி திரு. சவியோ ஃபொன்சேக்கா அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார். 

“இன்று சில்லறை வியாபாரிகள் வெறுமனே தொழில்நுட்பத்தை மாத்திரமன்றி அதற்கு அப்பால் வேறொன்றையும் கோருகின்றனர். அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை எவ்விதத் தடைகளுமின்றி, துல்லியமாகவும் இலகுவாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்கான மேம்படுத்தப்பட்ட தீர்வுகளே அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. 

Retail IT துறையில் நாம் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு அப்பால் சென்று, வர்த்தக நடவடிக்கைகளுக்கு முழுமையான தீர்வுகளை வழங்கி அவை மென்மேலும் டிஜிட்டல் துறையில் வளர்ச்சி பெற ஆதரவளிக்கிறோம்.

இந்தப் பயணத்தில் Posiflex நம்பிக்கைக்குரிய பங்காளராக மாறியுள்ள அதேவேளை, எதிர்வரும் வருடங்களில் இப் பங்காண்மையை வலுப்பெறச் செய்வதில் ஆவலாக உள்ளோம். 

இன்றைய நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்ற தொழில்நுட்பத் தீர்வுகளை உங்கள் காலடிக்குக் கொண்டு வருகின்றோம். உங்கள் முன்னேற்றமே எங்கள் நோக்கம்.”

Retail Technology Trends 2025 நிகழ்வில் சில்லறை விற்பனைத் துறையை தொழில்நுட்பம் எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை சிந்திக்க வைக்கும் முக்கிய அமர்வுகள், அது தொடர்பான தொழிற்துறைத் தலைவர்களால் நடத்தப்பட்டன.

உரையாற்றியவர்களுக்கிடையில், Retail ITயின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. சந்திம விக்கிரமதுங்க, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் சிரேஷ்ட உப தலைவர் மற்றும் குறூப் இன்போர்மேஷன் டெக்னோலொஜி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான திரு. நாலக்க உமகிலிய Retail Consultancy Services நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் திரு. ருவன் பெரேரா மற்றும் WebXPayயின் நிறைவேற்றுத் தலைவர் திரு. திலக் பியதிகம ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வில் பங்குபற்றியோருக்கு POS தொழில்நுட்பத்தின் அண்மைக்கால முன்னேற்றங்களை நேரடியாகப் பார்த்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய கலந்துரையாடல் ரீதியான கண்காட்சியும் நடைபெற்றது. 

காட்சிப்படுத்தப்பட்ட புத்தாக்கங்களுக்கிடையே Posiflex, உயர் செயற்றிறன் கொண்ட POS கட்டமைப்புகள், Kiosks மற்றும் Retail ITயின் ReTech சாதனங்களும் உள்ளடங்கின. 

புத்தாக்கத்துக்கும் தரச்சிறப்புக்குமான அர்ப்பணிப்புடன் வழிநடத்தப்படும் Retail IT இலங்கையின் Retail IT துறையில் முன்னணியில் உள்ளது. 

ஆரம்ப காலங்களில் வர்த்தகங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைத் தழுவும்போது, சில்லறை வியாபாரிகளை வலுப்படுத்த உதவுவதுடன், அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை நிலைபெறச் செய்து அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்தக்கூடிய தீர்வுகளையும் நிலைத்த ஆதரவையும் வழங்குவதன் மூலம் நம்பகமான பங்குதாராக Retail IT நிறுவனம் காணப்படுகின்றது.

Retail IT தொடர்பில் சுமதி ஹோல்டிங்சின் இணை நிறுவனமான Retail IT (தனியார்) நிறுவனம், இலங்கையின் முன்னணி Retail ITத் தீர்வுகளை வழங்குவதுடன், நாட்டின் மிக உயர்ந்த சில்லறை வியாபாரச் சங்கிலிகளுக்கு ஆதரவளிப்பதில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டது.

அதிநவீன POS மென்பொருள் மற்றும் வன்பொருள் (Software and Hardware) தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த இந் நிறுவனம், POS கட்டமைப்புகள், பார்கோர்ட் அச்சு இயந்திரங்கள், நேர வருகைக் கட்டமைப்புகள் மற்றும் POS கணக்கியல், மனிதவளம் மற்றும் சம்பளப் பட்டியல் போன்றவற்றுக்கான விசேட மென்பொருட்கள் உள்ளிட்ட விரிவான தீர்வுகளை வழங்குகின்றது. 

சுமதி ஹோல்டிங்ஸ் தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுகாதார சேவைகள், விருந்தோம்பல், பாதுகாப்பு மற்றும் அச்சு தொடர்பான தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைக் கொண்ட இலங்கையின் முன்னணி கூட்டு நிறுவனமாகும். 

நேர்மை, தரம் மற்றும் சமூகப் பொறுப்பு தொடர்பில் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்படும் சுமதி ஹோல்டிங்ஸ் அதன் வாடிக்கையாளர்களையும் அது சேவை வழங்கும் சமூகங்களையும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும் நம்பகமான பங்குதாரராக காணப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments