Thursday, March 13, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்வவுனியாவில் காணாமல்போன இளைஞன் இன்றுவரை மீட்கப்படவில்லை.

வவுனியாவில் காணாமல்போன இளைஞன் இன்றுவரை மீட்கப்படவில்லை.

வவுனியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு குருமன்காடு பகுதியில் காணாமல்போன இளைஞன் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது ஆட்சிக்கு வந்த அனுர அரசாங்கம் புதிய விசாரணைகளை மேற்கொண்டு தனது மகனான பாலகிருஷ்ணன் நிரேஸ் என்பவரை மீட்டுத்தருமாறு தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனது மகன் கடத்தப்பட்டுள்ளார். ஆதாரங்கள் இருந்தும் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கடந்த 2022 ஜனவரி 27 ஆம் திகதி காணாமல் போன பாலகிருஸ்ணன் நிரேஸ் என்ற வவுனியா இளைஞனின் தாயார் திருமதி கணேஸ் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது மகன் பாலகிருஸ்ணன் நிரேஸ் கடந்த 2022 ஜனவரி மாதம் 27 ஆம் திகதி காணாமல் போயுள்ளார். அவர் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு குருமன்காடு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்னால் தனது மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு அவ் வர்த்தக நிலையத்திற்கு காணாமல் போன தினம் பிற்பகல் 5.02 இற்கு சென்றுள்ளார்.

அதன்பிறகு அவன் தனது மோட்டர் சைக்கிளை எடுப்பதற்கு வெளியில் வரவில்லை. அவரது மோட்டர் சைக்கிளை அன்று மாலை 6.47 நிமிடத்திற்கு வேறு ஒருவர் வந்து எடுத்துச் செல்வதை சிசீரீவி வீடியோவில் காண முடிகிறது. இதனை நான் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளேன். இது தொடர்பில் நான் 2022 ஜனவரி 29 ஆம் திகதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் சிறு குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தேன்.

எனது மகனை காணவில்லை என நான் முறைப்பாடு செய்தேன். ஆனால் எனது மகன் இரண்டு நாட்கள் கடந்தும் வீட்டிற்கு வரவில்லை என தான் முறைப்பாட்டு கொப்பியில் எழுதப்பட்டுள்ளது. நான் கொழும்பிலும் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளேன். பொலிசார் தேடிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்களே தவிர, மூன்று வருடங்கள் கடந்தும் எந்தவித காத்திரமான பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.

எனது மகன் குருமன்காடு பகுதியில் உள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் தனது இரண்டரை வருட உழைப்பு பணத்தை வழங்கியுள்ளார். குறித்த வர்த்தக நிலையத்தின் முகாமையாளிடம் 85, 90 இலட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். தனது 30 ஆவது வயதில் மகன் புதிய தொழில் செய்ய திட்டமிட்டு இருந்தார். அந்தப் பணத்தைக் கேட்டு சென்ற போது தான் அவர் கடத்தப்பட்டுள்ளார். இதுவரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. நான் ஒவ்வொரு இடமாக தேடி வருகின்றேன். ஊடகங்கள் மூலமாவது நீதி கிடைக்குமா என நம்பி இருந்தேன் இன்றுவரை கிடைக்கவில்லை.

எனது மகன் தனது நண்பர் ஒருவரின் 5 இலட்சம் பணத்தை வாங்கி குறித்த வர்த்தக நிலையத்திற்கு வழங்கியுள்ளார்.; எனது மகன் காணாமல் போன பின் மகனின் நண்பர் குறித்த வாத்தக நிலையத்திற்கு சென்று தனது 5 இலட்சம் பணத்தை தருமாறு கோரினார். இதன்போது நிரேஸ் கொடுக்கச் சொன்னது என்று கூறி 5 இலட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். எனது மகன் காணாமல் போன பின் தான் இந்தச் சம்பவம் நடந்தது. மகன் பணத்தை எப்போது கொடுக்கச் சொன்னவர் என்பதை அறிய வேண்டும். எனவே எனது மகன் கடத்தப்பட்டுள்ளார். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அனுர அரசாங்கம் அவரைக் கண்டுபிடிக்க புதிய விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments