செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான நீர், ஒட்சிசன், மண் உள்ளிட்ட புவியியல் அமைப்புகள் இருக்கின்றதா என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரைப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.