வவுனியாவில் வட்டி வசூலிக்க மதுபோதையில் இரவில் வரும் ஊழியர்கள்
குறோவன் லங்கா என்ற நுண் நிதி கடன் நிறுவனத்தின் வட்டி வசூலிப்பவர்கள் கோவில்குளம் பகுதியில் மதுபோதையில் வீடுகளுக்கு சென்று அடாவடி செய்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
இரவிரவாக வீடுகளுக்கு செல்வதாகவும், இரவு 11.00 மணிக்கு பின்னரும் பெண்களுக்கு கைபேசியில் அழைப்பை மேற்கொண்டு தொல்லை கொடுப்பதாக தெரியவருகிறது.
இதனால் மன உலைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்ப பெண்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்
குறித்த நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்களே அடாவடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு!
கடன்களை வாங்கிட்டு போலீசிலும் முறைப்பாடு செய்ய முடியாத சூழ்நிலை எனவே குறித்த பகுதிக்கு வரும் ஊழியர்களுக்கு நிறுவன முகாமையாளர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு நிற்கின்றனர்